செய்திகள்

பாக்ஸ் ஆபிஸ் குயின் – மீண்டும் நிரூபித்த நயன்தாரா !

தெலுங்கில் மாருதி இயக்கத்தில் வெங்கடேஷ், நயன்தாரா இருவரும் நடித்திருந்த படம் பாபு பங்காரம். கடந்த 12ம் தேதி வெளியான இப்படம் தமிழிலும் செல்வி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

பாபு பங்காரம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான ஒரு படம் பல காலம் கழித்து இவ்வளவு அதிகம் வசூல் செய்துள்ளது.

இப்பட தயாரிப்பாளரும் படத்திற்கு கிடைத்த வரவேற்பை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

N5