செய்திகள்

2015இல் வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக சென்ற 608 இலங்கையர் உயிரிழப்பு

2015ஆம் ஆண்டில் மாத்திரம் வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக சென்ற 608 இலங்கையர்கள் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக உயிரிழந்தவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களாக சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  -(3)
இவர்களில் 428 பேர் ஆண்கள் என்பதுடன் 180 பேர் பெண்களாகும். இதில் 100 பேர் திடீர் விபத்துக்களாலும் , 367 பேர் நோய்வாய்ப்பட்டும் , 28 பேர் தற்கொலை காரணமாகவும் , 9 பேர் கொலை செய்யப்பட்டும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 109 பேரின் உயிரிழப்புக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.