செய்திகள்

மாநாட்டுக்கு வருகை தராதவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் : சு.க செயலாளர் எச்சரிக்கை

எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் கலந்துக்கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி , மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என அந்தக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் இன்றி யாரேனும் கட்சியின் மாநாட்டிற்கு வருகை தராவிட்டால் அவர்கள் கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுமெனவும் இதன்படி அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.     -(3)