செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டமும் அரசியல்கைதிகளும்- மரிசா டிசில்வா- இன்போர்ம்

பாலேந்திரன் ஜெயக்குமாரி காணமற்போன தனது மகனிற்காக உரத்து குரல் கொடுத்துவரும் வரும் ஓருவர், 2015 மார்ச் மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  362 நாட்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் செப்டம்பரில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2016 இல் அவர் வடக்கில் உள்ள தனது வீட்டிலிருந்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். அவரிற்கு எதிராக இரண்டுவழக்குகள் உள்ளன. ஆனால் எந்த குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படவில்லை.

ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டு இரண்டரை வருடங்களான பின்னரும்அவரது துயரம் முடிவடையும்போல தோன்றவில்லை.ஆகஸ்ட் 2015 முதல் செப்டம்பர் 2016 வரை பயங்கரவாத தடைச்சட்;டத்தின் கீழ் இடம்பெற்ற 36 கைதுகள் குறித்த முறைப்பாடுகள் தன்னிடம் பதிவாகியுள்ளதாக மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த 36 பேரில் மூவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.  ஓருவர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.இது தவிர இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் இந்தவருடம் ஏப்பிரலில் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டார்.

துமிழ் அரசியல்கைதிகள் தொடர்ந்தும் நாட்டின் பலபகுதிகளில் உள்ள சிறைகளில் வாடுகின்றனர். சிலர் மீது இன்னமும் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை,ஏனைய வழக்குகள் இழுபட்டுக்கொண்டுசெல்கின்றன.

இலங்கையின் அரசியல் தலைவர்கள் வழங்கி போலியான வாக்குறுதிகளால் களைப்படைந்துள்ள தமிழ்அரசியல் கைதிகள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியான பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்தில் ஆகஸ்ட் 8 ம் திகதி அவ்வாறான ஓரு போராட்டம் இடம்பெற்றது.மீண்டும் அமைச்சர் சுவாமிநாதன் தான் வழக்குகளை துரிதப்படுத்தப்போவதாக உறுதியளித்தார். கடந்தவருடம்  ஓக்டோபர் நவம்பர் மாதங்களிலும் உண்ணாவிரதப்போராட்டங்கள் இடம்பெற்றன. இவ்வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திலும் இவை இடம்பெற்றன ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

கடந்த வருடம் 7 மற்றும் 15 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் அந்தனி சந்திரா மற்றும் வசந்திரகுபதி ஆகிய இருவரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

pta

சமீபத்திய கைதுகளும் தடுத்துவைக்கப்படுதலும்

சமீபத்தில் அமைப்பொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்( வோச்டோக் கலக்டிவ்)இவ்வருடம் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வடக்குகிழக்கிலிருந்து 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்தே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஆகக்குறைந்தது 15பேர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள், யூன் 23 திகதி வரை அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாத நிலையிலேயே அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அனேக சந்தர்ப்பங்களில் சீருடைய அணியாத தங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவைசேர்ந்தவர்கள் அல்லது பொலிஸார் என அழைப்பவர்களே இந்த கைதுகளை மேற்கொண்டனர்,அவர்கள் தாங்கள் யார் என்பதை உரிய விதத்தில் அடையாளப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஆகக்குறைந்தது ஐவரின் குடும்பத்தினரிற்காவது அவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் 48 மணித்தியாலங்களிற்கு தெரிவிக்கப்படவில்லை. 23 சந்தேகநபர்களை கைதுசெய்தவர்கள் நீதிபதியின் முன்நிறுத்தவில்லைமேலும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி 72 மணித்தியாலத்திற்குள் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது என அவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர். குடும்ப உறுப்பினர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், துன்புறுத்தப்பட்டுள்ளனர், விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து சந்தர்ப்பங்களிலாவது தனிப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2015 செப்டம்பர் வரை உள்ள பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகள் குறித்த நிலைபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐவரின் வழக்குகள் 18 வருடங்களிற்கு மேல் நீடிப்பதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.1998 இல் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஓருவரின் வழக்கு 17 வருடங்களாக முடிவின்றி உச்சநீதிமன்றத்தில் நீடிக்கின்றது.

இன்னொருவர் 15 வருடங்களாக குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இன்னொருவர் 15 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னரே அவரிற்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.இதேபோன்று வேறு இருவரை பலவருடங்கள் தடுத்துவைத்தபின்னரே  அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.இன்னொருவர் 15 மாதங்கள் தடுப்பில் வைக்கப்பட்ட பின்னரே நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.ஷசிலரின் வழக்குகள் 400, 500 தடவைக்கு மேல் நீதிமன்றம் சென்றுள்ளன. ஓருவரிற்கு எதிராக 15 வழக்குகள் உள்ளன,இவை நான்கு மாவட்டங்களில் உள்ள ஆறு நீதிமன்றங்களில் இடம்பெற்றுள்ளன.

அரசாங்கம் 258 பேரை தடுத்துவைத்துள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இவர்களில் 60 பேரிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதலும், சீர்திருத்தலும்

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது 1979 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் பயங்கரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகும்.இதன் பின்னர் 1980களின் நடுப்பகுதியிலிருந்து இந்த சட்டம் பெருமளவிற்கு தமிழர்களிற்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செயற்பாட்டாளர்கள் இதனை நீக்குமாறு கோரிபோராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் 205 செப்டம்பரில் அரசாங்கம் இதனை அகற்றுவதற்கான உறுதிமொழியை வழங்கியது,இதனை அகற்றிவிட்டு சர்வதேச தராதங்களிற்குஏற்ற விதத்திலான புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவரப்போவதாக அது குறிப்பிட்டது.உள்நாட்டு ஊடகங்கள்  அரசாங்கம் புதியபயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என யூன் மாதத்தில தெரிவித்தன.

எனினும் இந்த சட்டங்கள் மிகமோசமானதாக காணப்படலாம் என செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். பயஙரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் கீழ் ஓருவரைகைது செய்வதற்கு வழிவகுப்பதாலேயே பயங்கரவாத தடைச்சட்டம் மிகமோசமானதாக காணப்படுகின்றது.தான் அப்பாவி என்பதை நிருபிக்கவேண்டிய பொறுப்பு சந்தேகநபருக்கே உள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் அதிகாரிகளிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் காரணமாக அவர்கள் ஓருவரை கைதுசெய்யும் போது பின்பற்றவேண்டிய உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை, அது நியாயப்படுத்தவும்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளவரை அரசியல்கைதிகளிற்குநீதி வழங்கப்படாதவரை, நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதாகவே காணப்படும்.