செய்திகள்

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இருந்து இராணுவம் வெளியேறியது! இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மைதானமும் விடுவிப்பு

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சனிக்கிழமை வெளியேறியுள்ளனர். அதேபோல் விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மைதானமும் விடுவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு பொது இடங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் செயற்பாட்டின் ஓர் கட்டமாக கலாசார மண்டபத்தில் இருந்து இராணுவம் வெளியேறியுள்ளது. பல பொது அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இவ் இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததுடன் அண்மையில் வடக்கிற்கான இளைஞர் அமைப்பு என்ற அமைப்பு இவ் இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இருந்து இராணுவம் வெளியேறியுள்ளதுடன் எதிர்வரும் செவ்வாய்கிழமை (23.08) உத்தியோகபூர்வமாக இக் கட்டிடத்தினை மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்குரிய மைதானம் விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதனால் மாணவர்கள் மைதானத்தை பயன்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கினர். இந்நிலையில் அவ் மைதானமும் விமானப்படையிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

s.jpg1

N5