புதிய அரசாங்கத்தை அமைக்க மகிந்த அணியை சேர்ந்த 7 பேர் ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த 7பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
இவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகவே ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து தானாக விலகுவோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவும் கூடும் இது தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த மற்றைய உறுப்பினர்கள் அவதானமாக இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




