செய்திகள்

பிரதமர் ரணிலுடன் நாளை முதலமைச்சர் விக்கி பேச்சு: விஷ ஊசி விவகாரமும் ஆராயப்படும்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்ரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளார். முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் விவகாரம் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்படும்.

பிரதமர் தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் நாளை பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக விடுவிக்கப்படவில்லை எனவும் அது குறித்து பிரதமருடன் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-06