செய்திகள்

இரகசியங்களை வெளியிடுங்கள் : ஜே.வி.பி ஜனாதிபதிக்கு கடிதம்

மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சி தொடர்பாக தன்னிடமுள்ள இரகசியங்களை வெளியிடுமாறு கோரி ஜே.வி.பியின் ஊழல் ஒழிப்புக் குரல் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
புதிய கட்சி உருவாகுமாகவிருந்தால் தான் இரகசியங்கள் பலவற்றை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு ஜனாதிபதிக்கு இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.
அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகிந்த தொடர்பான இரகசியங்களை வெளியிடுங்கள். மோசடிக்காரர்களை பாதுகாக்க முயற்சிக்க வேண்டாமென அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். -(3)