மலேஷியா பயணமாகிறார் மகிந்த ராஜபக்ஷ: பான் கீ மூனுடனான சந்திப்பை தவிர்க்க உபாயம்!
ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு வரும் செப்ரெம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகி, 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, லொகான் ரத்வத்தை, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு வரும் செப்ரெம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரும் செப்ரெம்பர் 1ஆம் திகதி இலங்கை வரவுள்ள நிலையிலும், மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கான இந்தப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மாநாட்டையும், பான் கீ மூனுடனான சந்திப்பையும் தவிர்த்துக்கொள்வதற்காகவே மலேஷியாவுக்கான இந்த விஜயத்தை அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
-06




