செய்திகள்

கோவை கிங்ஸ் கிரிகெட் அணி ‘செவாலியே’ நாயகனுக்கு வாழ்த்து 

பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே’ விருதுக்கு உலக நாயகன் கமலஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில், அவரை திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்தி வருகின்ற நிலையில், தற்போது, அவரை தமிழ் நாட்டு ப்ரீமியர் லீக் கோவை கிங்ஸ் கிரிகெட் அணியும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் (புதன்கிழமை) சென்னையில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வரை நடக்கிற நிலையில், அதற்கு லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அனுசரனை வழங்குகின்றது.

இந்நிலையில், லைக்கா புரொடக்ஷன்ஸ் ஊழுழு ராஜு மகாலிங்கம் அவர்களின் தலைமையில் அண லைக்கா கோவை கிங்ஸ் அணியின் வீரர்கள் நேற்று (வியாழக்கிழமை) காலை உலகநாயகன் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றதோடு, அணியின் அனைத்து வீரர்களையும் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

N5