செய்திகள்
மாநாட்டில் கலந்துக்கொள்ள மாட்டோம் : சு.க தொகுதி செயற்பாட்டாளர்கள் தீர்மானம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி செயற்பாட்டாளர்கள் குழுவொன்று கட்சியின் 65வது மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லையென தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கூடிய இந்தக் குழு நேற்று இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




