ஜனாதிபதியின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் : சீ.ஐ.டி விசாரணை ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
கடந்த வியாழன் , வெள்ளிக் கிழமைகளில் சைபர் தாக்குதலுக்கு இலக்காகி அந்த இணையத்தளம் செயலிழந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா யூத் என்று தம்மை அறிமுப்படுத்திக்கொண்ட குழு அந்த இணையத்தளத்திற்குள் ஊடுருவி ஜனாதிபதிக்கு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளதுடன் இணையத்தளத்தை முடக்கி தமது எச்சரிக்கை அறிக்கையொன்றை அதில் பதிவேற்றியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் சைபர் பிரிவினர் அதனை வழமைக்கு கொண்டு வந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக தற்போது சீ.ஐ.டியினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




