கொழும்புத் துறைமுகத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் தனியாருக்கு விற்க திட்டம் : ஜே.வி.பி குற்றச்சாட்டு
மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை தனியார் நிறுவனத்திற்கு விற்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பிரிவை தனியாருக்கும் விற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான மனுக்கோரலும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 1987 காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியினால் அரச வளங்களை விற்கும் செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அதேபோன்று தற்போது ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து அதனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




