செய்திகள்

வத்தளை தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்திய மூவர் கைது

வத்தளை ஒளியமுல்லையில் அமைக்கப்படவுள்ள தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ஒளியமுல்லை உத்தியானபுர பகுதியில் பாடசாலைக்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க அதில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார்.
இதன்போது பிக்குகளும் மற்றும் பிரதேசவாசிகளும் அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன் அமைச்சரை அங்கு உரையாற்ற விடாதவாறும் இடையூறுகளை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சந்தேகத்தில் மூன்றுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். -(3)