செய்திகள்

ஜனாதிபதியின் இணையத்தள ஹெக் விவகாரம் : மற்றுமொருவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவி தகவல்களை அழித்த சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நேற்றைய தினம் இது தொடர்பாக கடுகன்னாவ பகுதியில் 17 வயது மாணவனொருவன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    -(3)