செய்திகள்

மாநாட்டில் கலந்துக்கொள்ளதாவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க திட்டம்

குருநாகலில் எதிர்வரும் 4ஆம் திகதி  நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் கலந்துக்கொள்ளாத கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநாடு நிறைவடைந்த பின்னர் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி இது தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதன்படி அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தகுந்த காரணங்கள் இன்றி மாநாட்டுக்கு வருகை தராதவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படுமென கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.  -(3)