செய்திகள்

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அரசாங்கம் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : ஹெல உறுமய வலியுறுத்தல்

காணாமல் போனவர்களுக்கு  என்ன நடந்ததென கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி நேற்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒன்றியத்தினரால் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரான நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ் ,சிங்களம் , முஸ்லிம் என்ற வேறுபாடினின்றி பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் உள்ளக் குமுரல்களை நாம் அறிவோம். அரசாங்கம் தற்போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கவுள்ளது. அதனூடாக இவர்களுக்கு நியாயம் கிடைக்குமென எதிர்பார்கின்றோம்.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்ந்து அது தொடர்பாக அவர்களின் உறவவினர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது. அரசாங்கத்தின் பொறுப்பாகும். வடக்கு , கிழக்கு மற்றும் தெற்கு என சகல பிரதேசங்களிலும் காணாமல் போயுள்ளனர். இதன்படி காணாமல் போன சகலரைப்பற்றியும் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.   -(3)