படமாக்கப்பட்ட சுவாதி கொலைச்சம்பவம்
கடந்த சில மாதங்களாக அனைவரையும் உலுக்கிய சம்பவம் சுவாதியின் கொலை.
சென்னையின் பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த இந்த கொலையில் சுவாதியை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. போலிசுக்கு கூட யாரும் சொல்லவில்லை. இதை பற்றி சமூகவலைதளங்களில் பெரிய வாக்குவாதமே நடந்தது.
ஆனால் அங்கு இருந்தவர்களுக்கு ஒருவித குற்றஉணர்ச்சி இருந்து கொண்டேயிருக்கும்.
அப்படி ஒரு கதைக்களத்தை மையப்படுத்தி காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ள படம் தான் குற்றமே தண்டனை.
ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாக காதலிக்கும் ஒருவன் அவரை வீட்டிற்கே சென்று கொலை செய்கிறான். இதை பார்த்த சாட்சியான விதார்த் தனக்கெதற்கு வம்பு அமைதியாக இருக்கிறார். இதனால் அவரது குற்ற உணர்ச்சி அவரை படுத்தும் பாடு தான் இந்த கதையாம்.
மக்கள் இந்த கதையை எப்படி ஏற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
N5




