2017 வறுமையிலிருந்து மீட்கும் ஆண்டாக பிரகடனம்
2017 வறுமையிலிருந்து மீட்கும் ஆண்டாக பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கமைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டுக்கொள்ளல் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து, சகலரையும் ஒன்றிணைக்கும் வகையில் எதிர்வரும் 2017ம் ஆண்டினை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்கும், ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையிலும், குறித்த அமைச்சர்கள் மற்றும் பிர அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கூடிய குழுவொன்றின் மூலம் இவ்வேலைத்திட்டத்தை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)




