செய்திகள்

அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கோத்தா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தாக்கல்

2012 ஆகஸ்ட் 7ஆம் திகதி முதல் 2015 ஜனவரி 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் ஹிகான் பிலப்பிட்டிய முன்னிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ , முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி , அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஷங்க சேனாதிபதி ஆகியோரும் மற்றும் அவன்கார்ட் நிறுவனத்துடன் தொடர்புபட்ட அதிகாரிகளான பீ.டி.கொடகாவெல , சோமதிலக திஸாநாயக்க , நிஷங்க யாப்பா சேனாதிபதி , ஜயநாத் கொலம்பகே மற்றும் ஜயரட்ன பெரேரா ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  -(3)