வாக்களர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? : அறிந்துக்கொள்ளுங்கள்
2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி இன்று முதலாம் திகதி முதல் அதனை மாவட்ட செயலகங்கள் , பிரதேச செயலகங்கள் , உள்ளுராட்சி நறுவனங்கள் , தபால் நிலையங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் பார்வையிடலாம்.
மேலும் என்ற http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தள முகவரியிலும் அதனை பார்வையிட முடியும்.
இதன்படி வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர்கள் இருக்காவிட்டால் உடனடியாக அது தொடர்பாக மேன் முறையீட்டு படிவத்தை பூரணப்படுத்தி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. – (3)




