செய்திகள்

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மக்களுக்காக ரோட்டில் ஆர்பாட்டம்

பொலிசாருடன் இணைந்து தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக செயற்படுகின்றது. இது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் தொழிலாளர்களின் வேண்டுகோளின் படி இந்த காணிகளை தலா இரண்டு ஏக்கர் வீதம் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வேண்டுகோள்விடுத்துள்ளார்

நேற்று (01.09.2016) கண்டி மாவட்டம் உடுதும்பர பகுதி வைத்தலாவ தோட்டத்தில் இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்பு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்;.
தொடாந்து அங்கு பேசும் பொழுது இந்த வைத்தலாவ தோட்டமானது அரச பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான ஒரு தோட்டமாகும். இதனை கடந்த ஜந்து வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கையளித்திருந்துது. அந்த தனியார் கம்பனியானது தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை முறையாக செலுத்தவில்லை.அது மாத்திரம் அல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதாவது மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான தொழிலாளர்களுக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை. கடந்த ஜந்து மாதங்களாக தோட்டத்தை பலாத்காரமாக மூடி வைத்திருக்கின்றார்கள்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

இதன் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் பராமரித்த இந்த தோட்டத்தில் இருக்கின்ற கொழுந்துகலை பறித்து அவர்களின் வருமானத்தை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தோட்ட கம்பனியானது பொலிசாரின் உதவியுடன் இதற்கு இடையூறு விளைவித்து வருகின்றது. எனவே உடனடியாக அரசாங்கம் இந்த தோட்டத்தை பொறுப்பேற்று இங்குள்ள மக்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்து அவர் வழங்க வேண்டும். அதை விடுத்து வெறு தேவைகளுக்காக இதனை வழங்க முற்பட்டால் இந்த போராட்டம் இன்னும் வலுவடையும்.

நாங்கள் எங்களுக்கான இலவச கொடுப்பனவுகளையோ அல்லது அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற இலவச முத்திரைகளையோ கேட்கவில்லை.நாங்கள் கேட்பதெல்லாம் எங்களுடைய உழைப்பிற்கு எற்ற ஊதியம் மாத்திரமே.

இங்குள்ள தோட்ட மக்குளுக்கு வேறு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் இல்லை.இந்த தோட்டத்தில் இருக்கின்ற தேயிலை செடிகள் அனைத்தும் வீனாகின்றது.எனவே இதற்கு அரசாங்கம் உடனடி தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-06