செய்திகள்

ஜனாதிபதி இணையத்தளத்திற்குள் ஊடுருவிய மாணவனுக்கு பிணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவி அதிலிருந்த தகவல்களை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி இருவரும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு இன்று அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் ஹிகான் பிலப்பிட்டிய பிள்ளைகளின் திறமை என்னவென்பதனை அறிந்து அது தொடர்பாக பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அந்த மாணவனின் பெற்றோருக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். -(3)