செய்திகள்

பான் கீ மூனிடம் கால அவகாசம் கேட்டுள்ளோம்: பத்திரிகை ஆசிரியர்களிடம் மைத்திரி தெரிவிப்பு

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் காலஅவகாசம் வழங்குமாறு தாம் கோரியதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றிரவு மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக இன்று காலை, ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

நாம் ஒரு நீண்ட மோதல்களில் இருந்து வெளியே வந்திருக்கி்றோம், மெதுவாக முன்னகர்வதற்கு எமக்கு கால அவகாசம் தாருங்கள் என்று நான் ஐ.நா பொதுச்செயலரிடம் கூறினேன் என்று அவர் தெரிவித்தார்.
-06