செய்திகள்

லியோனி வதந்திக்கு எதிராகமுறைப்பாடு

பட்டிமன்ற நடுவரும், தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு மனு ஒன்றை கொடுத்தார்.

அதன் பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,

‘கடந்த மாதம் 27ஆம் திகதியில் இருந்து என்னை பற்றி வாட்ஸ் அப் மூலம் தவறான வதந்தியை பரப்புகிறார்கள். நான் விபத்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிடுகிறார்கள்.

எனது நண்பர்கள், குடும்பத்தினர் ஏராளமான பேர் செல்போன் மூலம் பேசி இதுபற்றி விசாரிக்கிறார்கள். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

அவினாசி தொகுதியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நான் பேசிவிட்டு வந்த பிறகுதான் என்னைப்பற்றி இதுபோல் வதந்தி பரப்புகிறார்கள்.

இவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முறைப்பாடு, மனுவில் தெரிவித்துள்ளேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

N5