செய்திகள்

சிகரட்டுக்கான வரியை 90 வீதமாக அதிகரித்தே தீருவேன் : ஜனாதிபதி உறுதி

சிகரட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு 90 வீத வரியை அறவிடும் வகையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையை காலம் தாழ்த்தாது நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கான புதிய கட்டிட திறப்புவிழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இன்று செய்ய வேண்டியதை நாளைய தினத்திற்கு தள்ளி வைத்து சகல மக்களையும் நோயாளிகளாக மாற்றிவிட வேண்டாமென சகல அமைச்சர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.  -(3)