முக்கிய பதவியை யுத்த குற்றச்சாட்டுள்ள மேஜருக்கு பான் கீ மூன் வழங்கினாரா?
தமிழர் தாயகமான வட பகுதியில் இந்திய அமைதிப்படையின் நிலைகொண்டிருந்த போது மேஜராக பணியாற்றிய தனது மருமகனான சித்தார்த் சாட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உயர்பதவி வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கிழக்காசியாவிற்கான ஒருங்கிணைப்பாளராக சட்டர்ஜியை நியமிக்கும் கடிதத்தில் பான் கீ மூன் கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளதாக இனர் சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சட்ட ரீதியான தகுதிஇல்லாமல் குறித்த பதவியை சட்டர்ஜிக்கு பான் கீ மூன் எவ்வாறு வழங்கினார் என்பது தொடர்பில் இனர் சிட்ரி பிரஸ் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய அமைதி காக்கும் படையில் இருந்த போது அவரின் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பான் கீ மூனின் மருமகன் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் வழங்குவதற்கு ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்ரிபன் டுஜாரிக் மறுத்துள்ளார். உயிரிழந்த மற்றும் சிதைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உடலங்களுடன் நிழற்படங்கள் எடுத்ததாகவும் இந்த நடவடிக்கை ஜெனிவா சாசனத்தை மீறும் ஒன்றென உள்ளதால் இந்த நடவடிக்கை யுத்தக் குற்றம் எனவும் இனர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் தமிழீழ விடுதலை புலிகளை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தோறக்கடித்த முறைமை தொடர்பில் சட்டர்ஜி பாராட்டு தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.
N5




