தர்மதுரையை பாராட்டிய பிரபல நடிகர் சிவகுமார்
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தர்மதுரை.
விஜய் சேதுபதி- தமன்னா உட்பட பலரும் நடித்துள்ளனர், இந்த படத்தை இயக்கிய சீனுராமசாமிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
கடந்த சில நாட்களுக்குமுன் நடிகர் சிவகுமார், படத்தை பாராட்டி வாழ்த்துமடல் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.
அதில், சீனுராமசாமி முழுமையான படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திய படம் தர்மதுரை.
ஏழைமக்களின் வரிப்பணத்தில் படித்து டாக்டரானவர்கள், கிராமத்து ஏழைகளுக்கு வைத்தியம் செய்து நன்றி கடன் அடைக்க வேண்டும் என்ற தத்துவம் மருத்துவர்களுக்கு பாடம் என புகழாரம் சூட்டியதுடன் விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து பிரபலங்கள் உட்பட ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவதால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறாராம் சீனுராமசாமி.
N5




