பொங்கல் பண்டிகையை விஜய் திருவிழாவாக கொண்டாட தயாரான ரசிகர்கள்
இளையதளபதி விஜய்யின் 60வது பட டைட்டில் நேற்று வெளியானதிலிருந்தே டிரெண்ட் செய்து ரசிகர்கள் அசத்திவிட்டனர்.
பரதன் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 60வது படத்திற்கு பைரவா என பெயரிட்டுள்ளனர்.
ஆட்டோ ரிக்ஷாவின் மீது விஜய் கம்பீரமாக நிற்கும் போஸ்டர் நேற்று வெளியானது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் படத்திற்கு, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
பொங்கல் பண்டிகையை விஜய் திருவிழாவாக கொண்டாட ஆட்டம், பாட்டத்துடன் அமர்க்களப்படுத்த தயாராகி கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
N5




