செய்திகள்

இராணுவம் தாம் நினைத்தவாறு இங்கு செயற்பட முடியாது: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

“யாழ்.மாவட்ட கட்டளை தளபதி , யாழ்.மாவட்ட செயலாளருக்கு தாம் சுவீகரிக்க உள்ள காணிகள் தொடர்பில் அறிவித்து உள்ளார். அதன் பிரகாரம் யாழ்.மாவட்ட செயலாளரும் , காணி உரிமையாளருக்கு இராணுவ கட்டளை தளபதி கூறியதன் அடிப்பையில் கடிதம் அனுப்பி உள்ளார். இராணுவத்தினர் தாம் நினைத்தவாறு இங்கு செயற்பட முடியாது” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண சபையின் 61 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த அமர்விலையே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

“யாழ்.மாவட்ட கட்டளை தளபதி , யாழ்.மாவட்ட செயலாளருக்கு தாம் சுவீகரிக்க உள்ள காணிகள் தொடர்பில் அறிவித்து உள்ளார். அதன் பிரகாரம் யாழ்.மாவட்ட செயலாளரும் , காணி உரிமையாளருக்கு இராணுவ கட்டளை தளபதி கூறியதன் அடிப்பையில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் சிலருக்கு காணிகள் மீள கையளிக்கப்படும் எனவும் , இன்னும் சிலருக்கு அடுத்த வருடத்தில் காணிகள் கையளிக்கப்படும் எனவும் , ஏனையோரின் காணிகளை சுவீகரிகரித்து விட்டு , அதற்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார். இவ்வாறு இராணுவம் தான் நினைத்த மாதிரி காணிகளை சுவீகரிக்க முடியாது” என முதலமைச்சர் தெவித்தார்.
-06