எஸ்பெஸ்டொஸ்க்கு 2020இலிருந்து இலங்கையில் தடை : அமைச்சரவையில் தீர்மானம்
சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எஸ்பெஸ்டோஸ் இறக்குமதி மற்றும் பாவனையை இலங்கையில் கட்டுப்படுதுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி எஸ்பெஸ்டோஸ் பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் பாவனை, இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றினை 2018-01-01ம் திகதியில் இருந்து கட்டுப்படுத்துவதற்கும், 2020-01-01ம் திகதியில் இருந்து குறித்த உற்பத்திகளை முற்றுமுழுதாக அகற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் அடங்கிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட உற்பத்தி பொருட்களின் மூலப் பொருளாக எஸ்பெஸ்டோஸ் கனியவளம் பயன்படுத்தப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் மூலம் புற்றுநோய் காரணியாக இனங்காணப்பட்ட நீல எஸ்பெஸ்டோஸ் இலங்கையில் இறக்குமதி 1987ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டது. இன்று இலங்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெள்ளை எஸ்பெஸ்டோஸ் வகையினங்களும் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை எஸ்பெஸ்டோஸ் வகையினங்கள் அதிகமாக கூறை தகடுகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் வெள்ளை எஸ்பெஸ்டோஸ் பயன்படுத்துவதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை இலாபகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு எஸ்பெஸ்டோஸ் பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் பாவனை, இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றினை 2018-01-01ம் திகதியில் இருந்து கட்டுப்படுத்துவதற்கும், 2020-01-01ம் திகதியில் இருந்து குறித்த உற்பத்திகளை முற்றுமுழுதாக அகற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் அடங்கிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. -(3)




