ஐ.தே.க மாநாட்டிற்கு துமிந்த செல்வார்
ஐக்கிய தேசிய கட்சியின் 70ஆவது மாநாட்டில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கலந்துக்கொள்ளவுள்ளார்.
நாளை கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக தான் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான அழைப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது மாநாட்டில் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் கலந்துக்கொண்டதை போன்று அவர்களின் மாநாட்டில் தான் கலந்துக்கொள்ளவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். -(3)




