செய்திகள்

லசந்த புதைக்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

5 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் புதைக்கப்பட்ட பகுதியில் தற்போது ஆயுதம் தரித்த பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
அவரின் கொலை தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்லும் வகையில் சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்து ஆராய நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி அது தோண்டியெடுக்கப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு பொரளை மயானத்தில் அவரின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)