செய்திகள்
ஜி.வி.பிரகாஷின் அடங்காதே
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவர் ஜீ.வி.பிரகாஷ்.டார்லிங்கில் தொடங்கி வரிசையாக வெற்றிப்படங்களில் நடித்துவரும் இவர் தற்போது புருஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துச்சாமியின் இயக்கத்தில் அடங்காதே என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.நாயகியாக வைபவி சந்தில்யா என்பவர் நடிக்கவுள்ளார். இவர் சந்தானம் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
N5




