செய்திகள்

செவ்வாய் ஆரம்பமாகிறது ஜெனீவா கூட்டத் தொடர்: இலங்கை குறித்து கேள்வி எழுப்பப்படலாம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகிறது. 30 ஆம் திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ள இக்கூட்டத் தொடரில் இலங்கை விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும், மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக, உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்,33 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் இருந்து உயிர்மட்டக் குழுவினர் எவரும் பங்கேற்கவில்லை. ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி, ரவிநாத ஆரியசிங்கவே, இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, உறுப்பு நாடுகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், எதிர்வரும் 13ஆம் திகதி 33 ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்தும் போது, இலங்கை தொடர்பான கருத்துக்களையும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-06