SLFP – TNA கூட்டணி அமைக்குமா?
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்குமாகவிருந்தால் அந்தக் கூட்டணியையும் தம்முடன் இணைத்துகக்கொள்வதற்கு தயார் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியியுடன் இணைந்து போட்டியிடுவதற்கும் ஆராய்ந்து வருவதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து வெளியிடும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இனவாத சிந்தனையுள்ள கட்சியுடன் இணையும் நோக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது எனவும் தமது கொள்கையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கினால் அதனையும் இணைத்துக்கொள்ள கட்சி தயார் என அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




