2020இல் இலங்கையை கைப்பற்ற ஐ.எஸ் திட்டம்? : அவர்களின் வரை படத்தில் இலங்கையும் உள்ளடக்கம்
ஐ.எஸ் தீவிரவாதிகள் 2020ஆம் ஆண்டளவில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை தம்வசப்படுத்தும் திட்டமொன்றை கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இணையத்தளமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி அவர்களால் 2020ஆம் ஆண்டளவில் முக்கிய நாடுகள் பல அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருமெனவும் அது தொடர்பான வரைபடமென கூறப்படும் வரை படமும் வெளியாகியுள்ளன.
சிரியாவை தளமாக கொண்டு இயங்கும் இந்த தீவிரவாத இயக்கத்தினால், தற்போது ஐரோப்பிய நாடுகளும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள், அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே 2020ஆம் ஆண்டுக்கான தமது உலக வரைப்படத்தை ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். -(3)




