செய்திகள்

புகைத்தலற்ற வலயத்தில் சிகரட் விற்பனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிகரட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடைசெய்யுமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக வைத்தியசாலையை அண்மித்த பகுதி புகைத்தலற்ற வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள போதும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லையெனவும் இதனால் அந்தப் பகுதிகளில் அதனை நடைமுறைப்படுத்துமாறும் அந்த இயக்கம் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
தேசிய வைத்தியசாலையை அண்மித்த பகுதி சிகரட் இல்லாத வலயம் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் வைத்தியசாலையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் சிகரட் விற்பனை இடம்பெற்று வருவதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. -(3)