செய்திகள்

மல்வத்து மகாநாயக்க தேரரிடம் வாங்கிக்கட்டிய வீரவன்ச

அரசியலமைப்பு தொடர்பாக பொய் கருத்துக்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாமென மல்வத்து மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குறிய திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கடும் அறிவுரை வழங்கியுள்ளார்.
புதிய அரசியலமைப்பில் பிரிவினை வாதிகளின் தேவைகளை நிறைவேற்றும் விடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நேற்று மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த போது வீமல்வீரவன்ச தெரிவித்துள்ள நிலையிலேயே அவரால் இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் அரசியலமைப்பு தயாரிக்கப்படாது இருக்கும் நிலையில் அது தொடர்பாக பொய் கருத்துக்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என மகாநாயக்க தேரர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். -(3)