செய்திகள்

வற் அதிகரிப்பு 9 மாதங்களுக்கு மட்டுமாம் : ராஜித கூறுகிறார்

வற் (வரி) அதிகரிக்கப்பட்டாலும் அது 9 மாதத்திற்கு செல்லுபடியாகும் வகையிலேயே சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மக்களுக்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வற் அதிகரிப்பு தொடர்பான சட்டமூலம் குறைந்தளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் அது மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு திருத்தங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)