செய்திகள்

தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு முட்­டுக்­கட்­டை­யாக மஹிந்த, விக்கி: சாடு­கி­றது ஜே.வி.பி.

மஹிந்த ராஜபக் ஷவின் சிங்­கள இன­வா­தமும் விக்­கி­னேஸ்­வ­ரனின் தமிழ் இன­வா­தமும் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டு­களும் இலங்­கையின் தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு “முட்­டுக்­கட்­டை­யா­க­வுள்­ளன” என்று ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

ஐ.நா.வும் அத­னோ­டி­ணைந்த அமைப்­பு­களும் எமது விட­யத்தில் தலை­யி­டு­வதை எதிர்ப்­ப­தா­கவும் அக்­கட்சி தெரி­வித்­தது. இது தொடர்­பாக ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேலும் தெரி­விக்­கையில்;

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவும் அத­னோடு தொடர்­பு­பட்ட அமைப்­பு­களும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டு­களை நடத்தி இலங்கை விடயம் தொடர்பில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வது வழக்­க­மா­கி­விட்­டது.

இவ்­வாறு உள்­நாட்டு விட­யங்­களில் தலை­யி­டு­வதை நாம் கடு­மை­யாக எதிர்க்­கின்றோம். அர­சாங்கம் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு கால தாமதம் காட்­டு­வதே இவ்­வா­றான தலை­யீ­டு­க­ளுக்கு ஏது­வாக அமை­கி­றது. அண்­மையில் காணாமல் போனோர் தொடர்­பாக கண்­ட­றியும் அலு­வ­லகம் ஒன்று நாட்டில் ஸ்தாபிப்­ப­தற்­கான சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

ஆனால் இது­வ­ரையில் அவ் அலு­வ­ல­கத்தின் நட­வ­டிக்­கை­களை அரசு ஆரம்­பிக்­க­வில்லை. இவ்­வாறு சட்ட மூலங்­களை நிறை­வேற்­றி­விட்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் காலந் தாழ்த்­து­வ­த­னா­லேயே ஐ.நா. வும் வேறு­நா­டு­களும் அமைப்­பு­களும் எமது விட­யத்தில் தலை­யி­டு­கின்­றன.

அதே­வேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவும் சர்­வ­தே­சமும் புலம்­பெயர் புலி­க­ளி­னதும் பிரி­வி­னை­வா­தி­க­ளி­னதும் தேவையை நிறை­வேற்­று­கி­றன. மறு­புறம் இலங்­கைக்குள் மஹிந்த ராஜபக் ஷ இதனைப் பயன்­ப­டுத்தி சிங்­கள இன­வா­தத்தை தூண்­டி­விட்டு அர­சியல் செய்­கின்றார். விக்­கினேஸ்­வரன் தமி­ழி­ன­வா­தத்தைத் தூண்­டி­வி­டு­கிறார்.

மஹிந்த, விக்கி, சர்­வ­தேசம் என முக்­கூட்டு அணி­யினர் நாட்டின் தேசிய பிரச்­சி­னையை தீர்க்க விடாது குழப்­பு­கின்­றனர். இதற்­கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அரசின் கால­தா­ம­தமே இதற்கு கார­ண­மாகும். அர­சாங்கம் தீர்வுத் திட்­டங்­களை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். வட மாகாண மக்­களின் பிரச்­சி னை­களைத் தீர்க்க வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம் இலங் கைக்கு அவசியமில்லை. இது மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவே பயன்படுத் தப்படுகிறது. எனவே பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக புதிய சட்டம் அவசியமில்லை என்றார்.
-06