சூரியவெவவில் இரு குழுக்களிடையே மோதல் : மோதலை தடுக்க சென்ற இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 2பேர் கொலை
அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலின் போது மோதலை கட்டுப்படுத்த சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
சூரியவெவ மீஹகஜபுர பகுதியிலுள்ள தபால் நிலையத்திற்கு முன்னாள் நின்ற குழுவொன்றுக்கும் அந்தப் பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்ற குழுவொன்றுக்குமிடையே மோதலொன்று ஏற்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த ஒருவர் மீது வெளியில் நின்ற குழுவினர் கூறிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர். இவ்வேளையில் அந்தப் பகுதியூடாக
கொழும்பு கொத்தலாவல பாதுகாப்பு பீடத்தில் கல்வி பயிலும் கடற்படை சிப்பாய்களை ஏற்றிக்கொண்டு கெப் வாகனமொன்று பயணித்துள்ளது. அவர்கள் அவ்விடத்தில் இறங்கி மோதல் நிலைமையை கட்டுப்படுத்த முயற்சித்த போது முச்சக்கர வண்டியில் இருந்த ஒருவர் இராணுவ சிப்பாய்களில் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்த சிப்பாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




