போர் தொடர்பில் நானும் புத்தகம் எழுதப்போகின்றேன்: களத்தில் குதிக்கிறார் சரத் பொன்சேகா
யுத்தம் தொடர்பில் தாமும் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புத்தகங்களை எழுதி யுத்தம் பற்றிய இரகசியங்களை கசிய விடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் எவ்வாறு மூண்டது, அதன் வரலாறு, காலத்துடன் எவ்வாறு மாற்றங்கள் ஏற்பட்டன, எவ்வாறு யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது என்பது குறித்து விளக்கி புத்தகம் எழுதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் இந்த புத்தகத்தை வெளியிட உத்தேசித்துள்ளதாகவும், ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
-06




