செய்திகள்

கைவிட்ட ரசிகர்கள், சூர்யா எடுத்த அதிரடி முடிவு?

சூர்யா நடிப்பில் கடைசியாக எந்த ஒரு படமும் மாஸ் ஹிட் இல்லை. 24 படம் நல்ல விமர்சனம் என்றாலும் தமிழில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால், தெலுங்கில் அப்படியே தலைகீழ் தான், படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது, சூர்யா கடைசியாக நடித்த அஞ்சான், மாஸ், 24 மூன்றுமே தமிழில் பெரிதும் வெற்றியடையாத படங்கள் தான்.

இதனால், தன் அடுத்த சிங்கம்-3யை எப்படியாவது மாஸ் ஹிட்டாக்க வேண்டும் என காலில் சக்கரம் கட்டி வேலைப்பார்த்து வருகிறார்.

இப்படத்தை தமிழை விட தெலுங்கில் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் செய்யவுள்ளாராம், ஏனெனில் சூர்யாவிற்கு தெலுங்கில் படத்திற்கு படம் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

தமிழ் ரசிகர்கள் கைவிட்டாலும் சூர்யாவை தாங்கிப்பிடிக்க தெலுங்கு ரசிகர்கள் ரெடியாகவுள்ளனர்.

N5