இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நாமலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை அவமதித்ததாக தெரிவித்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரராக அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளரினால் விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள போதும் அதனை மதிக்காது அவர் அழைப்பை நிராகரித்து வருவதாக அந்த ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. -(3)




