செய்திகள்

மைத்திரி நாளை அமெரிக்கா பயணம் : 21ம் திகதி ஐ.நாவில் உரையாற்றுவார்

ஐ.நாவின் 71ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார்.
நாளை அங்கு பயணமாகும் ஜனாதிபதி எதிர்வரும் 21ஆம் திகதி அங்கு உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க , மகிந்த சமரசிங்க , பைசர் முஸ்தபா ஆகியோரும் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதியான பின்னர் ஐ.நா கூட்டத்தொடரில் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)