புஸ்ஸலாவை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம்
புஸ்ஸலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் சிறைக்குள் தூக்கிட்ட தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக அந்த பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட குழுவொன்றினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலைலயிலேயே அவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைக்குள் இருப்பவர் தொடர்பாக கண்கானிக்காது இருந்த காரணத்தினாலேயே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. -(3)




