செய்திகள்

பொலிஸாருக்கு எதிராக மக்கள் போராட்டம் : புஸல்லாவையில் பதற்றம்

புஸல்லாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பொலிஸாருக்கு எதிராக பிரதேசவாசிகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை குற்றச்சாட்டொன்று தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறபிக்கப்பட்டிருந்த 30 வயது கவிராஜ் ரவீந்திரன் என்ற இளைஞன் புஸலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திலுள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளான்.
அவர் தனது ரீ சேர்ட் முலம் சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றபோதும் அவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து பிரதேச வாசிகள் வீதியில் டயர்களை எரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், நுவரெலிய- கண்டி வீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. -(3)