செய்திகள்

புசல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்

புசல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பொல பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புசல்லாவ பொலிஸ் சிறைக்குள் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தேக நபர் உயிரிழந்த போது பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும மற்றும் கான்ஸ்டபில் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)