செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு சவால்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அல்லது அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் கடந்த ஆட்சிக்காலத்தில் திருட்டில் ஈடுபட்டிருந்தால் அதனை ஆதாரத்துடன் நிரூபித்துக்காட்டுமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

அவ்வாறு அரசாங்கம் நிரூபித்து காட்டுமாகவிருந்தால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை கலைக்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

அங்கு பணம் உள்ளது , இங்கு பணம் உள்ளது என கடந்த காலங்களில் அரசாங்கம் கூறிய போதும் அதனை அரசாங்கத்தினால் இதுவரை நிரூபிக்க முடியவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)